புதுடெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி கூறினார்.


ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அரசு ஒரு புதிய அறிக்கை வெளிபடித்தயுள்ளது. பழைய 500 ரூபாய் ரயில்வே, பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் பழைய 500 ரூபாய் நோட்டு டிசம்பர் 9-ம்  தேதி நள்ளிரவு வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெருவித்திருந்தது.


பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 3-ம் தேதி பிறகு பெட்ரோல் பங்க், விமான டிக்கெட்டுகளுக்கு பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில், மெட்ரோ, பேருந்துகளில் பழைய 500 ரூபாய்  நோட்டு இன்று முதல் செயல் படாது.