500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாக வாழும் கலை (தி ஆர்ட் அப் லிவிங்) அமைப்பின் நிறுவனம் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் கூறினார். 


தற்போது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பினும், இது விரைவில் தீரும் என நம்பிக்கைத் தெரிவித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இவ்விஷயத்தில் பொறுமை காக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கறுப்புப் பணம், ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக இது இருக்கும் என குறிப்பிட்ட அவர், நீண்ட கால நோக்கில் மிகவும் நன்மை பயக்கும் திட்டமாக இது இருக்கும் என்றும் கூறினார்.


ஜம்மு காஷ்மீரில் 90 சதவீத மக்கள் வளர்ச்சியையும், அமைதியையும் விரும்புவதாகத் தெரிவித்தார் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். 


ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், வாழும் கலை (தி ஆர்ட் அப் லிவிங்) அமைப்பு சார்பில் ஜம்முவில் நடத்தப்பட்ட மாநாட்டில், தீவிரவாத இயக்கங்களில் ஏற்கனவே இருந்தவர்கள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்று செய்தியாளர்களிடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறினார்.