கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதுடெல்லி: திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமண செலவிற்காக ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் விவரம்:
* ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
* திருமண அட்டை
* திருமண அழைப்பிதழ், முன்பண செலவு ரசீது விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
* நவம்பர் 8-ம் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.
* டிசம்பர் 30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூபாய் நோட்டுகள் வங்கியிலிருந்து எடுக்க முடியும்.
* பெற்றோர் அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.
* வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம்.