அபாய அளவை தாண்டிய காற்று மாசு: அவதியில் டெல்லிவாசிகள்...
டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன.....
டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய அளவிலேயே தொடர்வதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு, அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில், பனிமூட்டமும் காணப்படுவதால், பொதுமக்கள் மூச்சுவிடுவதில் கூட கடும் சிரமம் அடைந்துள்ளனர். பனிகலந்த மாசு, சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.
காற்று மாசு அபாய அளவிலேயே தொடர்வதால், காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும், காற்று மாசு காரணமாக அவதியடைந்துள்ளனர். அதேபோல், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய காற்று மாசு காணப்படுகிறது.