கொரோனாவிற்கு ஒருபோதும் சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரொஸ் அதானோம் தெரிவித்துள்ளார்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் சமூக இடைவெளி மற்றும் முழு ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு "பயனுள்ள தடுப்பூசிகள்" கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்", முழுமையான தீர்வை தரும் வெற்றிகரமான மருந்து இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.


சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் சுமார் 18,236,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரைசுமார் 689,625 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை மிக மோசமான பாதிக்கப்பட்டுள்ள முதல் மூன்று நாடுகள் ஆகும். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros adhanom ghebreyesus) அறிக்கை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.... "பல தடுப்பூசிகள் இப்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. மேலும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் பல பயனுள்ள தடுப்பூசிகளைக் கொண்டிருப்போம் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், இப்போதைக்கு 100 % வெற்றிகரமாக குணப்படுத்த்க்கூடிய மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை.


ALSO READ | பெரியவர்களை விட 5 வயதுக்கு குறைவான குழந்தைகளை covid-19 அதிகம் பாதிக்கும்: ஆய்வு!


தற்போதைக்கு, கொரோனா பரவலை தடுக்க, பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும். உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் மைக் ரியான் அனைத்து நாடுகளையும் முககவசம் அணிதல், சமூக விலகல், கை கழுவுதல் மற்றும் சோதனை போன்ற சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


கொரோனா பரவலை நிறுத்துவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படைகளை பின்பற்ற வேண்டும் . நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல். இதையெல்லாம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், சமூகத்திற்கு தொற்று குறித்து புரிதலை எற்படுத்துதல், பரவலை கட்டுப்படுத்த அரசு உரிய அதிகாரம் அளித்தல், முகமூடி அணிதல்,, தவறாமல் கைகளை சுத்தம் செய்வது மற்றும் மற்றவர்களின் இருமல் பிறருக்கு பராமவல் தடுத்த போன்றவற்றை செய்ய வேண்டும். .


சுகாதார அமைப்பை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள், தொடர்புத் தடமறிதல் மற்றும் சீர்குலைந்த சுகாதார சேவைகள் சீக்கிரம் மறுதொடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். பாதுகாப்புகளையும் கண்காணிப்பையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இன்று நாம் ஒன்றாகச் செயல்பட்டால், உயிரைக் காப்பாற்ற முடியும், அனைவரும் சேர்ந்து வாழ்வாதாரங்களை காப்பாற்ற முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.