கர்நாடகா தார்வாட் பகுதியில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென்று இடிந்து விழுந்தது. திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.


இந்த விபத்து ஏற்பட்ட முதல் நாளில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60-க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். இந்நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்று 16 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்து சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.