கிடைத்தது வைரமா அல்லது வெறும் கல்லா: குழப்பத்தில் நாகாலாந்து கிராமம்
பல சமூக ஊடக பதிவுகள் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் `வைரங்கள்` கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளன.
கோஹிமா: நாகாலாந்தில் ஒரு விவசாயி தற்செயலாக வைரத்திற்கு ஒத்த ஒரு பிரகாசமான கல்லைக் கண்டுபிடித்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அரசு புவியியலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் அந்த இடத்தில் இன்னும் இருக்கக்கூடுமோ என்ற ஏதிர்பார்ப்பில், கிராம மக்கள் அந்த இடத்தில் பல இடங்களில் தேடி வருகிறார்கள். பல சமூக ஊடக பதிவுகள் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் 'வைரங்கள்' கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளன.
நாகாலாந்தின் (Nagaland) புவியியல் மற்றும் சுரங்க இயக்குநர் எஸ். மானென், வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு உத்தரவில், புவியியலாளர்களான அபெந்துங் லோதா, லாங்க்ரிகாபா, கென்யெலோ ரெங்மா மற்றும் டேவிட் லூபெனி ஆகியோர் இந்த விவகாரம் குறித்து விசாரித்து ஒரு நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பி.டி.ஐ யின் அறிக்கையின்படி, மாவட்டத்தின் வச்சிங் பகுதியில் விலைமதிப்பற்ற தாதுக்கள் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் (Social Media) கூறப்படுவது குறித்து விசாரிக்க இந்தக் குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சில கிராமவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய படிகங்கள் உண்மையான வைரங்கள் என்று புவியியலாளர்கள் நம்பவில்லை. ஏனெனில் இப்பகுதியில் வைரங்கள் இருப்பதாக இதுவரை எந்த பதிவுகளும் இல்லை.
இந்த அணி நவம்பர் 30 அல்லது டிசம்பர் 1 ஆம் தேதி கிராமத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: Viral news: பழங்குடி குழந்தைகளுக்காக 18 km தினமும் படகோட்டிச் சென்ற அங்கன்வாடி பெண்
இதற்கிடையில், வான்ச்சிங் கிராம சபை இந்த விலைமதிப்பற்ற கற்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் இடுகையிடுவதை நிறுத்துமாறு மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், மற்ற கிராமங்கள் அல்லது நகரங்களில் இருந்து எவரும் கிராமத்திற்கு வருவதைத் தடைசெய்ததாக தி இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வைரலாகியுள்ளது. மற்றும் கிராமவாசிகள் ஒரு மலையடிவாரத்தில் மண்ணைத் தோண்டி எடுப்பது, சிறிய படிகக் கல்லை உள்ளங்கையில் வைத்துக் காட்டுவது போன்ற பல படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரல் (Viral Video) ஆகியுள்ளது. இது ஒரு சாராருக்கு ஆர்வத்தையும் ஒரு சாராருக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: வைரல் வீடியோ: பாகிஸ்தான் பத்திரிகையாளரிடம் யானை செய்த சேட்டை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR