அந்த ஆய்வில், ஒரு டாலரில் எவ்வளவு பொருட்களை வாங்க முடியும் என்றும் அதே டாலருக்கு சமமான வெவ்வேறு நாடுகளில் பணத்தைக் கொண்டு எவ்வளவு வாங்க முடியும் என்றும் ஆய்வு செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆய்வின் கருவை சுருங்க கூற வேண்டுமென்றால் அமெரிக்காவில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு $1.94க்கு விற்பனையாகிறது என்று வைத்துக்கொள்வோம். $1.94 என்பதன் இந்திய மதிப்பு ரூ. 140. இந்தியாவில் ரூ.140ல் குறைந்தபட்சம் 4 கிலோ உருளைகிழங்கையாவது வாங்கலாம்.


இந்த விஷயத்தின் ஆய்வு அறிக்கையே இது. இப்படிபட்ட ஆய்வறிக்கையில் 54 நாடுகளின் பணத்தின் அளவும், பொருட்களை வாங்கும் அளவும் ஒப்பிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.


மேலும் படிக்க | ஹிஜாப் தீர்ப்பு; இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி: சீமான்


இதில் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது.


ஆய்வறிக்கையின் புள்ளி விவரங்கள் மூலம் உலகளவில் சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 


இதேபோல், இந்தியா பெட்ரோல் விலையில் உலகளவில் 3வது இடத்திலும், டீசல் விலையில் 8வது இடத்திலும் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


பெட்ரோல் விலையில் முதலிடத்தில் சூடான் நாடு இருக்கிறது. அங்கு ஒரு கேலன் பெட்ரோல் 8 டாலருக்கு விற்கப்படுகிறது. 2ம் இடத்தில் லாவோஸ் நாட்டில் பெட்ரோல் கேலனுக்கு 5.6 டாலருக்கு விற்பனையாகிறது. 


3ம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் பெட்ரோல் கேலனுக்கு 5 டாலர் என விற்பனை செய்யப்படுகிறது. அதே இந்தியாவில் ஒரு கேலனுக்கு டீசல் விலை 4.6 டாலருக்கு விற்பனையாகிறது. 


மொத்தம் உள்ள 54 நாடுகளில் இந்தியாவில் ஒரு லிட்டர் எல்பிஜி விலை உலக சந்தை மதிப்பில் 3.5 டாலராக உள்ளது. இதுவே உலகளவில் எல்பிஜியின் அதிக விலையாகும். 


இந்தியாவை தொடர்ந்து துருக்கி, பிஜி, மால்டோவா, உக்ரைன் உள்ளிட்ட முக்கிய நாடுகளும் சமையல் சிலிண்டரை அதிக விலைக்கு விற்கும் நாடுகள் பட்டியலில் உள்ளன.


மேலும் படிக்க | கர்நாடகத்தில் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR