முதல் முறையாக பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்!!
நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த பெட்ரோல் டீசல் விலையானது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியைப் பொருத்து மாறுபடுகிறது. அந்த வகையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய் 65 காசுகளுக்கும், லிட்டர் டீசல் விலை 80 ரூபாய் 78 காசுகளுக்கும் விற்கப்பட்டது. ஒரே அளவாக 26 சதவீத வாட் வரி வசூலிக்கப்படுவதால், பெட்ரோலைவிட டீசல் அதிக விலைக்கு விற்கப்படும் நிலை காணப்படுவதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர்.