தேர்தலில் மோதும் பிரபலங்கள்... பவன் கல்யான் vs ராம் கோபால் வர்மா - ஆந்திராவில் பரபரப்பு
Ram Gopal Varma: ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் நிலையில், அதில் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து ராம் கோபால் வர்மா போட்டியிடுகிறார்.
Ram Gopal Varma vs Pawan Kalyan: மக்களவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒரு நாளில் தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடைபெறும் எனலாம். இன்னும் மக்களவை தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல், மனு பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் தேதிகளும், அட்டவணைகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட உள்ளது. மக்களவையும், சட்டப்பேரவையும் ஒருங்கே நடைபெறுவதால் அம்மாநிலத்தின் அரசியல் களம் தற்போது பரபரப்பாக உள்ளது.
ஆந்திராவில் மெகா கூட்டணி
ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தவே, சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளார். மேலும், பிரபல நடிகரான பவன் கல்யாணும் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்த நிலையில், தற்போது தெலுங்கு தேச கட்சியின் கீழ் அங்கு பலமான கூட்டணி உருவாகியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சி இந்த கூட்டணியில் சார்பில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது.
மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் ஜன சேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், தெலுங்கு தேச கட்சி 144 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. இதில், பிதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் போட்டியிட உள்ளார் என ஜன சேனா கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் படுதோல்வி
கடந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இதே பாஜக கூட்டணியில் இருந்த ஜன சேனா 8 தொகுதிகளில் போட்டியிட்டு, டெபாசிட்டையும் இழந்து மோசமான தோல்வியை தழுவியது. இருப்பினும், ஆந்திராவில் ஆளும் கட்சியை கவிழ்க்க பெரும் கூட்டணி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராம் கோபால் வர்மாவின் திடீர் முடிவு
நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ள நிலையில், பிரபல இயக்குநரான ராம் கோபல் வர்மாவும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவரின் X தளத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில்,"திடீர் முடிவு... நான் பிதாபுரம் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, எந்த கட்சியின் சார்பில் போட்டியிட போகிறார், மேலும் அவர் போட்டியிட உள்ளது சட்டப்பேரவை தொகுதியா, மக்களவை தொகுதியா என்பதை அவர் அதில் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், இவர் 2019இல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டு திரைப்படங்களை அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தயாரித்திருந்தார். குறிப்பாக அந்த திரைப்படத்தில் சந்திரபாபு நாயுடுவை எதிர்மறை கதாபாத்திரத்தில் சித்தரித்ததும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ