சில மாதங்களுக்கு முன் ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் 7 முறை தரையிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பிய நிலையில், சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது. இப்போது 29 அக்டோபர் 2022 வரை விமான நிறுவனம், 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. முதலில் எட்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், DGCA தற்போது இந்த கட்டுபாடுகளை அக்டோபர் 29 வரை நீட்டித்துள்ளது. 1937 ஆம் ஆண்டு விமான விதிகளின் விதி 19A இன் கீழ் விமான சேவைக்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "மிகவும் எச்சரிக்கையாக" விமானத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகவும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ​சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) உத்தரவின்படி, ஸ்பைஸ்ஜெட் அதன் விமானங்களில் 50 சதவீதத்திற்கு மேல் இயக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 19- ஜூலை 5 காலப்பகுதியில், இயக்கப்பட்ட விமானங்களில், குறைந்தபட்சம் எட்டு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து, ஜூலை மாதம், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், எட்டு வாரங்களுக்கு இந்த விமான நிறுவன விமானங்களுக்கு தடை விதித்தது.


மேலும் படிக்க | Boeing 737 Max விமானத்தை இயக்க 90 SpiceJet விமானிகளுக்கு தடை: DGCA


முன்னதாக, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 80 விமானிகளை திடீரென மூன்று மாத விடுமுறைக்கு அனுப்பி உள்ளது. இந்த மூன்று மாதத்திற்கு 80 விமானிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு வழங்கியிருப்பது விமானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிராந்திய வழித்தடங்களில் இயங்கும் Boeing 737 Max விமானங்களை இயக்கும் சுமார் 40 விமானிகளும், Q400 வகையை சேர்ந்த விமானங்களை இயக்கும் சுமார் 40 விமானிகளும் மூன்று மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.


மேலும் படிக்க | ஸ்பைஸ்ஜெட்டை தொடர்ந்து பீதியை கிளப்பும் விஸ்தாரா ஏர்லைன்ஸ்... நடந்தது என்ன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ