`இந்துத்துவா` என்பது எவருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல: DK.சிவக்குமார்
கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்): பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “இந்துத்துவாவும் கோயிலும் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார். 61 வயதான காங்கிரஸ் தலைவர், கர்நாடகாவில் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட முக்கிய நபர்களில் ஒருவர். அவர், இங்குள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்றார். சிவகுமார் சனிக்கிழமை இரவு சுமார் 8.00 மணியளவில் ஆன்மீக நகருக்கு வந்தார். மாலை பாபா காலபைரவரின் ஆசி பெற்றார். ஞாயிற்றுக்கிழமை காலை, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன், கர்நாடக துணை முதல்வர் மகாகாலின் 'பஸ்ம ஆரத்தி'யில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், 2023 நவம்பரில் அல்லது அதற்கு முன் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "இந்துத்துவாவும் கோயிலும் யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை" என்று பாஜகவை சாடினார். கர்நாடகாவைப் போலவே, மத்தியப் பிரதேச மக்களும் "பாஜகவின் ஊழலால்" சிரமப்படுகிறார்கள், எனவே வரவிருக்கும் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி நிச்சயம் என்கிறார் டிகே சிவகுமார்.
"இந்த முறை மத்திய பிரதேசத்திலும் இரட்டை எஞ்சின் ஆட்சி மாறும். முன்னாள் முதல்வர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்," என்று அவர் கூறினார். சிவகுமார் மேலும் கூறுகையில், மத்திய பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலை விட, காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்றார்.
கர்நாடகாவில், 224 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், 135 இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்வராகவும், சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். சிவக்குமார் கோயிலுக்கு சென்றபோது, எம்எல்ஏ மகேஷ் பர்மர், ஷோபா ஓஜா, ஜீது பட்வாரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உடன் சென்றனர்.
மேலும் படிக்க | ஜாக்பாட் திட்டம்... மலிவு விலையில் மருந்துகள் - கூடவே வேலைவாய்ப்பும்!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணைமுதலமைச்சராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சராகவும் உள்ள டி.கே.சிவக்குமார், இம்மாத தொடக்கத்தில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில், மேகதாது அணை திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், முதலாவது கூட்டத்திலேயே மேகதாது அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த உத்தரவிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில், மேகதாது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என மாநிலங்களும் பயனடையும் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நாளை முதல் ரயில்களில் மிகப்பெரும் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ