கன்னடா தெரியாதா? அப்போ வேலை இல்லை!!
கர்நாடகா மாநிலம் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னடா மொழி தெரியாத வங்கி ஊழியர்களுக்கு வேலை இல்லை என அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக கன்னட மொழியினை அறிந்திருக்க வேண்டும் எனவும், தெரியாதவர்கள் ஆறு மதங்களுக்குள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்களுடைய வேலை பறிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கன்னடா மொழி தெரியாத வங்கி ஊழியர்களிடம் கிராமப்புற மக்கள் தொடர்புகொள்ள மிகவும் சிரமபடுவதகவும், மக்கள் எளிமையாக வங்கி சேவையின பெற வங்கி ஊழியர்களிடம் இத்தகு மாற்றம் தேவை எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.