Child Porn vs POCSO Act: குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்ததோடு, தனது தீர்ப்பையும் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, குழந்தைகள் ஆபாச திரைப்படங்களை நீங்கள் வைத்திருந்தாலே அல்லது செல்போனில் வைத்திருந்தாலே போக்சோ சட்டத்தின்படி குற்றம் தான் என்று உச்சநீதிமன்றம் மிகவும் ஒரு வலுவான தீர்ப்பை அளித்துள்ளது. 


மேலும் தனது தீர்ப்பில் "குழந்தைகள் ஆபாச படம்" என்பதற்கு பதிலாக சைல்ட் செக்சுவல் அண்ட் எக்ஸ்பிளாயிடேடிவ் அண்ட் அப்யூசிவ் மெட்டீரியல் (Child Sexual and Exploitative and Abuse Material) என மாற்றி பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது. "குழந்தைகள் ஆபாச படம்"  என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


மேலும் சிக்கலான பாலியல் நடத்தை, இணையத்தில் உள்ள தவறான தகவல்களுக்கு தீர்வு காண பாலியல் கல்விக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது சுகாதாரம் மற்றும் பாலியல் கல்விக்கான விரிவான திட்டம் அல்லது வழிமுறையை வகுக்க ஒரு நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.


பாலியல் கல்வி பற்றிய தவறான கருத்துக்கள் இந்தியாவில் பரவலாக இருப்பதாகவும், சமூக இழிவானது பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறது என்றும், இதன் விளைவாக இளம் பருவத்தினரிடையே குறிப்பிடத்தக்க அறிவு இடைவெளி ஏற்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.


இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்த்தால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது செல்போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. 


இந்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், "குழந்தைகள் சம்பந்தமான ஆபத்து படங்களை பதிவிரக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல, ஆனால் அதை மற்றவர்களுக்கு பகிர்வது தான் குற்றம்" என்று கூறி அந்த இளைஞருக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். 


அவரின் உத்தரவை எதிர்த்து தான் "குழந்தைகள் உரிமை அமைப்பு" உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, தனது தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


மேலும் படிக்க - Important Notice | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!


மேலும் படிக்க - ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை... என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம்!


மேலும் படிக்க - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு என்கவுண்டர்! போலீஸ் அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ