ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவடி சீசீங்ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரௌடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட பல்வேறு ரவுடிகள் என மொத்தம் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை மாறி மாறி காவலில் எடுத்து செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசீங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் தாம்பரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் சுவர் ஒட்டிகளை ஒட்டியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக அவரை தீவிரமாக காவல்துறையினர் தேடி வந்தனர். ஆனால் செம்பியம் தனிபடை போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்திருப்பதாக எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சீசீங் ராஜாவின் குடும்பத்தினர் போலீசார் நேற்று காலை கைது செய்து அழைத்துச் சென்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் சீசீங் ராஜாவின் மனைவி தனது கணவர் காலையில் வெளியில் சென்றவர் இதுவரை வீடு வரவில்லை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதாக கூறி தனிபடை போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனது கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது, இந்த காலகட்டத்தில் அவர் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள், எனது கணவரை போலி என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகிறது. தமிழ்நாடு அரசு என் கணவரை உயிருடன் மீட்டு தர வேண்டும் தனது கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க பேசி இருந்தார். சீசிங் ராஜா மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீசிங்கு ராஜா என்கவுண்டர்
கைது செய்யப்பட்ட ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரை தாக்கி விட்டு ததப்பி செல்ல முயன்றதாக ரவுடி சீசிங்கு ராஜாவை சென்னை நீலாங்காரை பகுதியில் உள்ள அக்கறை எஸ்கான் TEMPLE பகுதியில் வைத்து போலீசாரின் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் போது சீசிங்கு ராஜா உயிர் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. நேற்று ரவுடி சீசிங்கு ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் உள்ள கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள அக்கறை கெனல் கிராஸ் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாகவும், அதை போலீசார் பறிமுதல் செய்ய அழைத்து சென்றுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து போலீசாரை வெட்ட சீசிங்கு ராஜா முயற்சி செய்ததாகவும், இதனால் தற்காப்புக்காக நீலாங்கரை போலீசார் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும் அப்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த ரவுடி சீசிங்கு ராஜாவின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ