புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தோ அல்லது வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தோ அல்லது வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.


இதுவரை, பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 43 சிறப்பு ரயில்கள் மூலம் 55,473 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்படுவர் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


"தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்கிறது. எனவே, தொழிலாளர்கள் நடந்தோ அல்லது வாகனங்கள் மூலமாக சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று இதுதொடர்பான அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஒரு நாளைக்கு சுமார் 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்ப மாநில அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்பாடுகள் செய்யப்படும் வரை நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.