நமது பிரதமர் நேர்மையானவர் என்று நாட்டு மக்கள் கருதுகிறார்களா? டெல்லி முதல்வர்
இன்றுடன் ஆம் ஆத்மி கட்சி 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடி வருகின்றனர் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்.
புதுடில்லி: ஊழல், வகுப்புவாதம், சாதி ஆகியவற்றை அகற்றுவதற்காக "அரசியல் புரட்சி" மூலம் ஆம் ஆத்மி கட்சி முன்னோக்கி செல்கிறது என்று அக்கட்சியின் தலைவர் மற்றும் தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. அடுத்தே ஆண்டே 2013-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இன்றுடன் ஆம் ஆத்மி கட்சி 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடி வருகின்றனர் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்.
இதுக்குறித்து தனதுட்விட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,
"ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சியின் இன்றை நாளில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது. தன்னலமின்றி வேலை செய்யும் மில்லியன் கணக்கான தொண்டர்கள் ஆதரவுடம். பல தடைகள் இருந்தும், அந்த அனைத்து தடைகளையும் தாண்டி, ஆம் ஆத்மி கட்சி "அரசியல் புரட்சி" மூலம் ஊழல், வகுப்புவாதம், சாதி ஆகியவற்றுக்கு எதிராக முன்னோக்கி செல்கிறது."
"இன்று ஆம் ஆத்மி கட்சியின் பிறந்த நாள் விழா...
நாங்கள் பெருமையாக கூறமுடியும் 'இன்னும் இருக்கிறோம்' என்று...
"ஆம் ஆத்மி கட்சியில் இருப்பதால், நாட்டின் பொறுப்பை நீங்கள் தொடர்ந்து உணர்கிறீர்கள். நாட்டின் சேவைக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்."