ஃபிக்சட் டெபாசிட் லாபம் தரும் மிகச் சிறந்த முதலீடு. ஆனால், பலருக்கும் பயம் எப்படி முதலீடு செய்வது? நம்பலாமா? எந்த வங்கி சிறந்தது? இப்படியான கேள்விகள் பல மனதில் இருக்கும். நீங்க சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கணக்கையே ஃபிக்சட் டெபாசிட் கணக்காக மாறினால்?... யோசனை நல்லா இருக்கு ஆனா எப்படி மாற்றுவது என யோசனையா?. கவலை வேண்டாம்! SBI வங்கி இந்த வசதியை கொண்டுவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank Of India) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் SBI சேமிப்பு பிள்ஸ் (Savings Plus) என்ற கணக்கு சலுகையை வழங்குகிறது. இந்த வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் பணம் தானாகவே நிரந்தர வைப்பாக (fixed deposits FD) மாற்றப்படும், மேலும் SBI நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம், வைப்புக்கு கிடைக்கும்.


ALSO READ | ஜனவரி 1 முதல் காசோலை பணபரிவர்தனை முறையில் மாற்றம் - இதோ முழு விவரம்!


SBI சேமிப்பு பிளஸ் கணக்கு குறித்த விவரங்கள், SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான onlinesbi.com மற்றும் sbi.co.in ஆகியவற்றில் கிடைக்கும். SBI சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- க்கு அதிகமாக உள்ள ஒருவருடைய வைப்பு தானாக SBI நிரந்தர வைப்பாக (Fixed Deposit) மாறும். இதற்கு SBI சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ரூபாய் 35,000/- ஆக இருக்க வேண்டும். அப்படியென்றால் ஆரம்ப குறைந்தபட்ச உபரி தொகை ரூபாய் 10,000 ஆக இருக்க வேண்டும், அது தானாக SBI FD ஆக மாறும். அதிலிருந்து கூடுதல் ரூபாய் 1,000/- SBI FD ஆக மாறிவிடும்.


உதாரணமாக உங்கள் SBI சேமிப்பு பிளஸ் வங்கி கணக்கில் ரூபாய் 35,000/- இருக்கிறதென்றால், ரூபாய் 10,000/- தானாக FD ஆக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் ரூபாய் 1,500/-யை உங்கள் SBI சேமிப்பு பிளஸ் கணக்கில் செலுத்தினால், ரூபாய் 1,000/- SBI எப்டி’யில் சேர்ந்துவிடும். மீதம் உள்ள ரூபாய் 500/- உங்கள் சேமிப்பு கணக்கிலேயே இருக்கும்.


ALSO READ | இந்த வங்கிகள் Fixed Depositக்கு அதிக வட்டி அளிக்கின்றன; முழு விவரம் இதோ!


SBI சேமிப்பு பிளஸ் கணக்கிற்கும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி வசதி, கைபேசி வங்கி வசதி, ATM அட்டை மற்றும் குறுஞ்செய்தி அலேர்ட் ஆகிய வசதிகளைப் பெறுவார்கள். எனவே, நீங்கள் SBI சேமிப்பு கணக்கு வைப்பு மூலம் அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைத்தால் SBI சேமிப்பு பிளஸ் கணக்கு ஒரு நல்ல தேர்வு.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR