33% இட ஒதுக்கீட்டை அறிவித்து அனைவரின் கனவையும் நனவாக்கியுள்ளார் மாநில முதலமைச்சர். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. எப்படி சாத்தியமானது பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிசாய்க்கப்பட்ட நாள். பெண்களின் உரிமை மற்றும் அதிகாரம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார் முதலமைச்சர். அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 


எப்படி சாத்தியமாயிற்று இது? இந்த துணிச்சலான முடிவை எடுத்த முதலமைச்சர் யார்?
பஞ்சாப் மாநில முதலமைச்சர் இந்த பாராட்டத்தக்க முடிவை எடுத்துள்ளார். மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அமைச்சர்களின் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.


அரசாங்கத்தில் உள்ள பதவிகளுக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யும்போது, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
2020 ஆம் ஆண்டு பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (பெண்களுக்கான பதவிகளை ஒதுக்கீடு செய்வது) விதிகளுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 


மேலும், வாரியங்கள் மற்றும் நகராட்சிகளில் ஏ, பி, சி மற்றும் டி பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்யும்போதும் பெண்களுக்கு 33%  இட ஒதுக்கீடு கொடுப்பது கட்டாயமாகும். 


இதையும் படிக்கலாமே!  #BoycottTanishq: தனிஷ்க் நகைக்கடையை புறக்கணிப்பு காரணம் என்ன?


சட்ட எழுத்தர் பணியாளர்களை உருவாக்குவதற்கான ஒப்புதல்


நீதிமன்ற வழக்குகள் / சட்ட விவகாரங்களை சரியான நேரத்தில,  பயனுள்ள முறையில் தொடர, பஞ்சாப் சிவில் செயலக (மாநில சேவை வகுப்பு -3) விதிகள், 1976 ஐ திருத்தியது பஞ்சாப் அமைச்சரவை. பஞ்சாப் சிவில் செயலகத்தில் ஒரு சட்ட எழுத்தர் பணியாளரை உருவாக்குவதற்கு ஆட்சேர்ப்பு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர், பொது எழுத்தர் பணி தொடர்பான 100 பதவிகளை நீக்கப்படுவதாகவும், இதனால் நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.  


மாநில வேலைவாய்ப்பு திட்டத்திற்கு முதல்வரின் ஒப்புதல்
இது தவிர, 2020-22 மாநில வேலைவாய்ப்பு திட்டத்திற்கும் முதல்வர் அமரீந்தர் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் கீழ், 2022 ஆம் ஆண்டில், மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ், அரசு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் துரிதகதியில் நியமனங்கள் செய்யப்படும்.


விவசாய சட்டங்களுக்கு எதிரான சட்டத்திற்கான தயாரிப்பு
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றுவதற்காக அக்டோபர் 19 ம் தேதி மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  


இதையும் படிக்கலாம் | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அறிவிப்பு எப்போது?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR