National Latest News In Tamil: மகாராஷ்டிராவில் பாஜக தலைமைாயிலான மகா யுதி கூட்டணி பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145-ஐ கைப்பற்றினாலே பெரும்பான்மை கிடைத்துவிடும். அந்த வகையில், பாஜக மட்டும் 132 இடங்களை அதன் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. அவர்களின் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளையும், பிற கட்சிகள் 4 தொகுதிகளையும் என மகா யுதி கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுமுனையில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளையும், பிற கட்சிகள் 4 தொகுதிகள் என மொத்தம் 50 இடங்களே கிடைத்தன. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை விட எதிர்கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. மேலும் பாஜகவே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளதால் இந்த முறை பாஜகவை சேர்ந்தவரே முதலமைச்சராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவரது ராஜினாமாவை ஆளுநரிடம் இன்று அளித்துவிட்ட நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற சஸ்பென்ஸ் தற்போது தொடர்கிறது.


பெரும் தாக்கத்தை செலுத்திய 28 தொகுதிகள்


மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பது ஒருபுறம் இருக்க, பாஜக கூட்டணி இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியதற்கான காரணங்களையும் தெரிந்துகொள்வது முக்கியமாகும். அதிலும் குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை பாஜக வசம் சென்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது, இஸ்லாமியர்கள் 20 சதவீதத்திற்கும் மேல் வாழும் 38 தொகுதிகளும் இந்த வெற்றித் தோல்வியில் கடும் தாக்கத்தை செலுத்தி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.


மேலும் படிக்க | டெல்லி வானிலை: ஒருபக்கம் மோசமான காற்று.. மறுபுறம் கடுமையான குளிர்


இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 38 தொகுதிகளில் 22 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. மீதம் உள்ள 13 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் காங்கிரஸ் மட்டும் இந்த இடங்களில் கடந்த தேர்தலில் 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, ஆனால் தற்போது வெறும் 5 தொகுதிகளிலேயே வென்றுள்ளது. அதேபோல், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இங்கு 6 தொகுதிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இங்கு 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலமே, இஸ்லாமிய வாக்குகள் கடுமையாக சிதறியிருப்பதும், சிதறியது பாஜக கூட்டணிக்கு கைக்கொடுத்திருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. 


பாஜக வாக்குகளை குவித்தது எப்படி?


பாஜக கூட்டணி கைப்பற்றிய 22 தொகுதிகளில், பாஜக மட்டும் 14 இடங்களில் வெற்றி வாகை சூடி உள்ளது. கடந்த தேர்தலில் இங்கு 11 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 6 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளையும் கைப்பற்றி மிரட்டியிருக்கிறது. பாஜக, காங்கிரஸ் அல்லாமல் இந்த 38 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 2 இடங்களையும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 1 தொகுதியையும் கைப்பற்றியிருக்கிறது. 


இஸ்லாமியர்களின் வாக்குகள் எப்போதும் ஒருசாரார் பக்கம் மொத்தமாக விழும் என கூறப்படுகிறது. அதற்கு இஸ்லாமிய மதகுருமார்களின் பங்களிப்பும் இருக்கும். ஆனால் இந்த முறை மதகுருமார்கள் இதில் தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதான் பாஜகவுக்கு கூடுதல் சாதகத்தை உருவாக்கி, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் அதிக வாக்குகளை பெற உதவி உள்ளது. மேலும், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் ஒருபக்கம் ஒருங்கிணையாததும் பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாகும். 


சிதறிய இஸ்லாமிய வாக்குகள்


இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒருங்கிணைந்த வாக்குகள் பெரும் உதவியாக இருந்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்காததற்கு வாக்குகள் பிரிந்ததும், சில இடங்களில் நிலவிய இருதுருவ அரசியலுமே காரணம் என கூறப்படுகிறது. அதுவும் சில தொகுதிகளில் பல்வேறு இஸ்லாமிய வேட்பாளர்கள் இருந்ததும் வாக்குகள் சிதற வழிவகை செய்திருக்கிறது. 


உதாரணத்திற்கு அவுரங்காபாத் கிழக்கு தொகுதியில் ஏஐஎம்ஐஎம் மாநில தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி., இம்தியாஸ் ஜலீல், பாஜகவின் அதுல் சாவேவிடம் வெறும் 2 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தொகுதிகளில் வஞ்சித் பகுஜன் ஆகாடி கட்சியின் வேட்பாளர் 6,507 வாக்குகளையும், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் 5,943 வாக்குகளை பெற்று, பெருவாரியாக வாக்குகளை பிரித்துள்ளனர். இதனால்தான், இம்தியாஸ் ஜலீல் தோல்வியடைந்தார் எனலாம். 


மேலும், பாஜகவின் வளர்ச்சி அரசியல் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மேற்கொண்ட நலத்திட்டங்களும் பாஜகவுக்கு இத்தகைய வெற்றியை பெற்றுக்கொடுத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 


மேலும் படிக்க | யார் இந்த கல்பனா சோரன்? வெறும் 250 நாட்கள்.. ஜார்க்கண்டின் சிங்கப் பெண்ணாக மாறியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ