அகமதாபாத்: எதிர்வரவிருக்கும் தேர்தலுக்காக மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி. பிப்ரவரி 21 மற்றும் 28ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் (Local Body Election) நடைபெறவுள்ளது.


இதையொட்டி முதலமைச்சர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் பயணித்து தேர்தல் பிரச்சாரத்தில் (Election Rally) ஈடுபட்டுள்ளார். 


Also Read | தேர்தல் பிரச்சாரத்தில் Captain Vijayakanth: சிலிர்த்து போன சின்ன கௌண்டர் ரசிகர்கள்


வதோதராவின் (Vododara) நிஜம்புரா பகுதியில் நேற்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்த விஜய் ரூபானி பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று அவர் தள்ளாடி மயங்கி விழுந்தார். ஆனால், அவர் கீழே விழுவதற்குள் அருகிலிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கி பிடித்துவிட்டனர்.



உடனடியாக அங்குக் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. மேடையிலேயே முதலமைச்சருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு, அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து குஜராத் முதலமைச்சர் உடனடியாக அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஐ.நா. மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Also Read | பிரதமரின் தமிழக பயணம்: தமிழில் பேசி தமிழர்களை வாழ்த்திய மோடி


இதனிடையே, பிரசாரத்தின் போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த செய்தியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, விஜய் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தற்போது விஜய் ரூபானியின் உடல்நிலை நலமாக உள்ளதாக குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் தெரிவித்தார்.
24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR