ஹைதராபாத்: ஹதராபாத்தில் ஒரு நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த 156 கற்களை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் போராடி அகற்றியுள்ளனர். சிறுநீரகங்களுக்குள் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்புகளின் கடினமான படிவுகளால் சிறுநீரக கற்கள் உருவாகின்றது.  இவற்றை சிலருக்கு வலி நிவாரணிகள் மூலமும், சிலருக்கு சிகிச்சை மூலமும் அகற்றப்படுகிறது.  உணவு பழக்கம், அதிக உடல் எடை, சில மருந்துகள் போன்றவற்றால் இவை ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை ப்ரீத்தி யூரோலஜி மற்றும் கிட்னி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு ஸ்கேன் செய்த பொழுது மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அதில் அவரது சிறுநீரகத்தில் பெரிய அளவிலான கல் இருப்பது போன்று தெரிந்தது.  உடனே மருத்துவர்கள் அந்த 50 வயதான நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் லேபர்ஸ்கோபி(laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் கற்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த சிகிச்சை மூலம் அவர் சிறுநீரகத்தில் இருந்த 156 கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. 



இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நோயாளிக்கு இரண்டு ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை இருந்துள்ளது, ஆனால் அவர் இதற்கு சிகிச்சை பெறவில்லை, அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டதால்  தான் அவர் தற்போது மருத்துவமனைக்கு வந்துள்ளார்.  மேலும் நம் நாட்டிலேயே பெரிய அளவிலான அறுவை சிகிச்சை இல்லாமல் லேபர்ஸ்கோபி(laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் இத்தனை கற்களை அகற்றியது இது தான் முதல் முறை" என்று கூறியுள்ளனர்.


ALSO READ | காதலியின் கணவனிடமிருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த இளைஞன் மரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR