`ஒரே நாடு ஒரே தேர்தல்` பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்': பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோஷத்தை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசு அளித்தது. மறுபுறம் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே அல்ல எனக் கூறி வருகின்றனர்.
நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அதைப்பற்றி ஆராய்ந்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' பரிந்துரைகளை குறித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமே எனக்கூறி 18, 626 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில்முக்கியமாக, நான்கு முதல் ஐந்து இடங்களில் அரசியல் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும். அதன் மூலமாக ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை முன்வைத்திருந்தது.
பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல இனங்கள் இருக்கின்ற இந்தியாவில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல் இருக்கிறது என்றும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் கூட அதற்கு வழி இல்லை என்று பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடி
இந்நிலையில், இந்திய கான்ஸ்டிடியூஷனல் அமெண்ட்மென்ட் எனப்படும் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை கொண்டுவர போதுமான எண்ணிக்கை, இன்றைய தினத்தில் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
இதற்கு முன்பாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எடுத்துக்கொண்டால் பாஜாகவிற்கென தனிப்பெரும்பான்மை இருந்தது. அதாவது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலே மக்களவையில் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்ற முடிந்திருந்தது. அதேபோல மாநிலங்களவை எடுத்துக்கொண்டால் மாநிலங்களவையில் கூட்டணி கட்சியின் ஆதரவு தேவைப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது சூழ்நிலையில், மக்களவையிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை மற்றும் மாநிலங்களவையிலும் கூட்டணி கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலைப்பாட்டில் தான் பாஜாகவும் இருக்கிறது.
இதற்கு முன் கொண்டுவரப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவையும் எடுத்துக்கொண்டாலும், அதற்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடி கட்சியும், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி என இரண்டு கட்சிகளும் அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதன் காரணமாகத்தான் வக்பு சட்ட திருத்த மசோதாவை அவர்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி இருந்தார்கள்.
எனவே இன்றைய நிலையில், இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு முக்கிய கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. ஒன்று தெலுங்கு தேசம். இரண்டாவது ஐக்கிய ஜனதா தளம்.
தெலுங்கு தேசத்தை எடுத்துக்கொண்டால் தெலுங்கு தேசம் எப்படி இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுடன் தான் ஆந்திரா மாநிலத்திற்கு தேர்தல் வருகிறது எனவே தெலுங்கு தேசத்தை பொறுத்தவரை இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பான நிலைப்பாடை எதிர்பார்களா என்பது சந்தேகம் தான்.
ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தை எடுத்துக்கொண்டால் அதற்கான நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நிதிஷ்குமார் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குதே தேசம் கட்சி, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம், இந்த இரண்டு கட்சிகளும் எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறுமா? அதனை எப்படி பாஜாக அமல்படுத்திருக்கிறது என்பது தெரியவரும்.
மேலும் படிக்க - 'ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது' - ஸ்டாலின் கொண்டுவந்த 2 தீர்மானங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ