வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மெஹபூபா முப்திக்கு வலியுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தூதுக்குழு ஆளுநர் சத்ய பால் மாலிக்கை வெள்ளிக்கிழமை சந்தித்து மாநிலத்தில் நிலவும் நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியது. கூட்டத்தின் போது, ஆளுநர் கட்சிகளின் தலைவர்களிடம் தங்கள் தொழிலாளர்களை வதந்திகளை நம்பக்கூடாது, அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி தலைமையில் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து புகார் அளித்தனர். தேவையற்ற பதற்றம் என்று விளக்கம் அளித்த ஆளுநர் சத்யபால் மாலிக் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மெஹ்பூபா முப்தி, ஷா பேசல், சஜத் லோன், இம்ரான் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்களை அழைத்துப் பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக் அரசியல் கட்சியினரின் புகார்களைக் கேட்டறிந்தார்.


படைக்குவிப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை மட்டும்தான் என்றும் ஆளுநர் விளக்கம் அளித்தார். அரசியல் சட்டம் 35 A ரத்து செய்யப்படலாம் என்ற அச்சமும் தேவையற்றது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மெஹ்பூபா முப்தி, காஷ்மீரில் தற்போது மனோரீதியான யுத்தம் நடைபெறுவதாக தெரிவித்தார்.


மக்கள் கடும் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே போல் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும் காஷ்மீரில் என்னதான் நடக்கிறது என்று 6 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த தம்மாலேயே அறிந்துக் கொள்ள முடியவில்லை என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.