நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜே.என்.யூ வன்முறை குறித்து அறிந்துக்கொள்ள வேண்டிய 10 தகவல்கள்...


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ளவர்கள் ஏ.பி.வி.பி.யை சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

  • தில்லியின் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர் ...

  • ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ் மற்றும் பேராசிரியை சுசித்ரா சென் ஆகியோர் பலத்த காயத்துடன்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.... குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சில மாணவர்கள் முகத்தை மறைத்தபடி உருட்டுக்கட்டைகளுடன் வந்து இடதுசாரி மற்றும் பிற கட்சிகளின் மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

  • சபர்மதி விடுதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இடதுசாரி அமைப்பு மாணவர் சங்கத்தினர் ஏபிவிபி மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இடது மற்றும் பிற கட்சிகளின் மாணவர்கள்தான் தங்களைத் தாக்கியதாக ஏபிவிபி தரப்பு கூறுகிறது. இந்நிலையில் ஸ்வராஜ் கட்சியை சேர்ந்த யோகேந்திர யாதவ் அங்கே சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது ...

  • நாட்டின் மதிப்புமிக்க ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் காயமடைந்த மாணவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டித்துள்ளார். தாக்குதலில் ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருப்பதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் விடியோவில் பேசியுள்ளார்.

  • ஜேஎன்யு மாணவர்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது இந்தியாவின் மதிப்பைக் கெடுக்கும் செயல் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் டுவிட்செய்துள்ளார். தாக்குதலுக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வன்முறையை உடனடியாக போலீஸார் தடுத்திருக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

  • ஜே.என்.யூ வில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து  பல்கலைக்கழகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்... ஜே.என்.யுவில் மாணவர்கள் இடையே நிகழ்ந்த கோஷ்டி மோதல்  குறித்து தில்லி போலீஸ் இணை கமிஷனர் ஷாலினி சிங் விசாரணை நடத்துவார். இது தொடர்பாக  தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி போலீஸ் கமிஷனரிடம் அறிவுறுத்தியுள்ளார். வன்முறை பற்றிய அறிக்கையும் கோரப்பட்டுள்ளது ... வன்முறைக்குப் பிறகு, ஏராளமான மாணவர்கள் ஜே.என்.யூ வளாகத்தில் கூடியிருந்தனர் ... இதனிடையே நிலவரம் குறித்து தில்லி போலீஸ் துணை கமிஷனர் தேவேந்திர ஆர்யா கூறுகையில், பல்கலைக்கழக வளாகத்தில் நிலைமை இயல்பாகிவிட்டது... போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர் ... அனைத்து விடுதிகளுக்கும்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது ... தேவையான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்..

  • ஜேஎன்யு வன்முறைக்கு இடதுசாரி மாணவர் அமைப்புகளை ஏபிவிபி குற்றம் சாட்டியுள்ளது ... ஏபிவிபியின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி வெளியிட்டுள்ள வீடியோவில்  இடது ஆதரவு மாணவர் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணிகளை சீர்குலைத்து வருவதாகவும் ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்துவதை தடுத்தனர் என்றும் மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் தடுப்பதாகவும் கூறினார். மேலும், வகுப்புக்கு வந்த  மாணவர்களை இடதுசாரி ஆதரவு மாணவர்கள் ஹாஸ்டலுக்குள் நுழைந்து உருட்டுக்கட்டைகளால் தாக்கியதாகவும், பல்கலைக்கழக வளாகத்தில் இயல்பு திரும்புவதை அவர்கள்  விரும்பவில்லை என்றும் ஏபிவிபி குற்றம் சாட்டியது. சுமார் 500 பேர் பெரியார் விடுதிக்குள் பலவந்தமாக நுழைந்து ஏபிவிபி மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது...

  • ஜே.என்.யுவில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் ஜே.என்.யுவில் ஒன்றுகூடத் தொடங்கியுள்ளனர் .. இந்நிலையில் இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாணவர்களும் தில்லி காவல்துறை தலைமையகம் உள்ள ஐ.டி.ஓ பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். இதனால்  ஐ.டி.ஓ. சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜே.என்.யூ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ஜே.என்.யூ மாணவர் சங்கத்தினருக்கும் ஏபிவிபியினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது ... மோதலுக்குப் பிறகு, ஏபிவிபி மாணவர்கள் ஜேஎன்யூ பிரதான வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்து இடதுசாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் ...

  • ஜே.என்.யுவுடன் நேரடியாக தொடர்புடைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால், ஜே.என்.யுவில் நடந்த வன்முறைகளைக் கண்டித்து, மாணவர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  இந்த சம்பவம் கவலை தருவதாகவும் துரதிர்ஷ்டவசமானது. பல்கலைக்கழகத்தின் கௌரவத்தை மாணவர்கள் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜே.என்.யுவில் படித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வன்முறையை கைவிட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்று கண்டித்துள்ளார். பாஜகவும் வன்முறையை கண்டித்தது ...