உத்தரபிரதேச மாநிலம் நாக்பூர் பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி ராணூவ உதவியுடன் கைது செய்யப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் நாக்பூரில் பிரம்மோஸ் ஏவுகணை பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ISI உளவாளியை ராணுவ உளவுத்துறையின் ஒத்துழைப்புடன் கண்டறிந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நிஷாந்த் அகர்வால் தேசிய முக்கியத்துவம் பற்றிய முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுளார். அகர்வாலை உத்தரபிரதேச ஏடிஎஸ் காவலில் எடுத்துவிசாரணை நடத்தி வருகிறது.


பாகிஸ்தானில் தனது மேல் உள்ளவர்களுக்கு நடுத்தர அளவிலான சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றிய தகவலை அவர் கடத்தி  வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரை கைது செய்ததற்கும் உள்ளூர் காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல்கள் தெரவிக்கின்றன. மேலும் கைது செய்யப்பட்ட நிஷாந்த் அகர்வால் மீது அதிகாரபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிரம்மோஸ், உலகில் வேகமாக செல்லும் குரூஸ் ஏவுகணை. இதனை  நீர்மூழ்கிக் கப்பல், விமானம் அல்லது நிலத்திலிருந்து ஏவலாம். இந்த ஏவுகணையானது DRDO  மற்றும் ரஷ்யாவின் NPOM ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.