ஆரவல்லி மலைத் தொடரில், ட்ரோன்கள் உதவியுடன் 5 லட்சம் விதைகளை தூவியது ஹரியானா வனத்துறை
மலைப்பகுதியின் செங்குத்தான சரிவுகள், துண்டிக்கப்பட்ட பகுதிகள், அணுகுவது எளிதாக இல்லாத பகுதிகளில் விதைகளை தூவுவதில் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரவல்லி மலை தொடரில், மலைத்தொடரில், பசுமையை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக, சுமார் 5 லட்சம் விதைகளை தூவ ஹரியானா வனத்துறை ட்ரோனைப் பயன்படுத்தியது.
மலைப்பகுதியில் உள்ள செங்குத்தான சரிவுகள், துண்டிக்கப்பட்ட பகுதிகள், அணுகுவது எளிதாக இல்லாத பகுதிகளில் விதைகளை தூவுவதில் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரவல்லி மலைத்தொடர் என்பது வடமேற்கு இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். சுமார் 692 கிமீ நீளமுள்ள இந்த மலைத் தொடர் தில்லி, ஹரியானா, ராஜஸ்தான் வழியாக சென்று குஜராத வரை நீண்டுள்ளது.
ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!
ஆரவல்லியில் விதைகளை தூவும் பணி ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை முடிவடைந்து. ஃபரிதாபாத், யமுனநகர், பஞ்ச்குலா, மற்றும் மகேந்தர்கர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மலைப்பகுதியில் விதை தூவப்பட்டது. ட்ரோன்கள் கொண்டு விதை தூவும் முயற்சி முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்ற ஆண்டு தூவப்பட்ட விதைகளில், 15% மட்டுமே முளைத்ததாக கூறிய அதிகாரிகள், தற்போது, மழைகாலத்தில் சரியான நேரத்தில் தூவப்பட்டிருப்பதால், 20-30% விதைகள் முளைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலவம், கொன்றை, அத்தி, அரச் அமரம் உள்ளிட்ட பல தரப்பட்ட மரங்களின் விதைகள் விதைக்கப்பட்ட
பீப்பல், பில்கான், அமல்தாஷ், பேல் பத்ரா, பஹாரி பாப்ரி, ரோஞ்ச் மற்றும் கைரி ஆகியவை விதைகளை பரப்பிய இனங்கள்.
நான்கு மாவட்டங்களில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தூவபப்ட்ட கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விதைகளில், 50,000 விதைகள் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதியில் தூவப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒரு ட்ரோனில், 2 கிலோ எடை விதை எடுத்து செல்லும் வகையிலும், பூமிலிருந்து 10 முதல் 15 மீட்டர் உயரத்தில் இருந்து விதையை தூவும் வகையிலும், அந்த ட்ரானில் ப்ரோகிராமிங் செய்யப்பட்டிருந்தது என வனத்து துறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு ட்ரோன் ஒரு நாளில் 20,000 முதல் 30,000 மர விதைகளை தூவும் திறன் கொண்டது என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரவல்லி மலையின் செயற்கை கோள் புகைப்படங்களை பயன்படுத்தி, அடர்த்தி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து தேர்தெடுக்கப்பட்ட இடங்களில் விதைகள் தூவப்பட்டதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரவல்லை மலை பகுதி வறண்ட பகுதியாக இருப்பதாலும், மழை குறைவாக் பெய்வதாலும், அங்கு பசுமையாஇ அதிகரிக்கும் முயற்சி தொடர்ந்து ஒரு சவாலாகவே இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ALSO READ | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!
ஆரவல்லி மலையில் உள்ள மண்ணின் தன்மை, அங்கு பெய்யும் மழையின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளாக, அதன் பசுமை பகுதியை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.