புதுடெல்லி: மும்பையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் மற்றும் வேறு இரண்டு பேரை அக்டோபர் 13 வரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) திங்கள்கிழமை (அக்டோபர் 4) கோரியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரிய கான், அர்பாஸ் சேத் என்னும் வியாபாரி மற்றும் முன்முன் தமேச்சா உட்பட குறைந்தது எட்டு பேர், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். மும்பை கடற்கரையில் ஒரு கப்பலில் என்சிபி படையினர் சோதனை நடத்தி, நடுக்கடலில் கோவாவுக்குச் சென்ற கப்பலில் போதைப்பொருள் விருந்தில், இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். சனிக்கிழமை இரவு. NCB மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக எட்டு நபர்களும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர் என்றார். ஆர்யன் கான், அர்பாஸ் சேத் வியாபாரி மற்றும் முன்முன் தமேச்சா உட்பட மூன்று பேர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


ALSO READ | போதை பொருள் விவகாரம்; சிக்கிலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன்..!!!

கப்பலில் ஒரு விருந்து திட்டமிடப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கப்பலில் சோதனை நடத்தியதாக என்சிபி நீதிமன்றத்தில் தெரிவித்தது. "எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன, அதன் அடிப்படையில் சோதனைகள் நடத்தினோம். கோகோயின் மற்றும் பிற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட மேலும் ஐந்து நபர்கள் விசாரணையில் உள்ளனர். NCB இந்த வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளது. எனவே, முழு தகவல்களையும் பெற எங்களுக்கு அவர்களை மேலும் விசாரிக்க வேண்டும். வாட்ஸ்அப் சாட் விபரங்கள், ஆரியன் கானிற்கு போதைப் பொருள் தொடர்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது என NCB கூறியுள்ளது.


அரபிக்கடலில், சொகுசு கப்பலில் மூன்று நாள் கப்பல் பயணத்தின்போது போதை மருந்துகள் பயன்படுத்தப்படுவது பற்றி நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் அறிந்திருந்ததா என்பதையும் NCB விசாரணை செய்து வருகிறது. 


ALSO READ | நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR