Drugs Case: இளம் நடிகை அனன்யா பாண்டேவிடம் என்சிபி கடுமையான விசாரணை
போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்அப் அரட்டை ஆராய்ந்த போது ஆரியன் கானுக்கும் அந்த அறிமுக நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தரப்பில் கூறப்படுகிறது.
புது டெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்குப் (Aryan Khan) பிறகு, இப்போது நடிகை அனன்யா பாண்டே மீதான பிடியை என்சிபி (NCB) இறுக்குவதாகத் தெரிகிறது. அனன்யாவின் மும்பை பாந்த்ரா வீட்டில் சோதனைக்குப் பிறகு, குழுவினர் இன்று மதியம் 2 மணிக்கு NCB அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கூறினார். அதே நேரத்தில், இப்போது அனன்யா தனது வீட்டில் இருந்து கிளம்பி என்சிபி அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.
ஆர்யன் கான் வழக்கில், அனன்யாவின் பெயர் வாட்ஸ்அப் அரட்டை என்சிபிக்கு கிடைத்துள்ளது. ஆர்யன் கானுடன் வாட்ஸ்அப் அரட்டையில் அனன்யாவின் பெயர் இருப்பது தெரியவந்த பிறகு, என்சிபி அவரது வீட்டை சோதனை செய்தனர். அதன் பிறகு அனன்யா பாண்டேவை (Ananya Pandey) என்சிபி குழுவினர் நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளனர்.
அக்டோபர் 20 புதன்கிழமை, செஷன்ஸ் நீதிமன்றம் ஆர்யனின் ஜாமீன் விண்ணப்பத்தை நிராகரித்தது. அதே நேரத்தில், இன்று அனன்யா பாண்டேவின் வீட்டிற்கு NCB குழு சென்ற செய்தி ஊடகங்களில் வெளியானது. அனன்யாவுடன், என்சிபி குழுவும் ஷாருக்கானின் வீட்டிற்கும் சென்றுள்ளனர் மறுபுறம், குரூஸ் போதைப்பொருள் வழக்கில் அக்டோபர் 2 முதல் ஆரியன் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | போதை பொருள் விவகாரம்; சிக்கிலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன்!
ஏஎன்ஐ செய்த ட்வீட்டை வைத்து பார்த்தால், இந்த வழக்கில் மற்றொரு அறிமுக நடிகையின் பெயரும் தெரியவந்துள்ளது எனச் சொல்லலாம். ஆரிய கான் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏஎன்ஐ சமீபத்திய ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டில், "மும்பை என்சிபி ஆரியக் கானின் வாட்ஸ்அப் அரட்டையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகக் கூறுயுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்அப் அரட்டை ஆராய்ந்த போது ஆரியன் கானுக்கும் அந்த அறிமுக நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே சாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போது இளம் நடிகையின் வீட்டில் NCB அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணைக்கு நேரில் வருமாறு அழைத்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில நடிகைகள் சிக்கக்கூடலாம் எனத் தெரிகிறது.
ALSO READ | ஷாருக்கான் மகனிற்கு ஹிர்திக் ரோஷன் கூறிய அறிவுரை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR