COVID-19: கேரளாவில் உலக புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள்
கேரளா முழுவதும் கோவிட் -19 தொற்று பாதிப்புகள் தொடந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இரண்டு வார கால இரவு நேர ஊரடங்கு உத்தரவை மாநில அரசு திங்கள்கிழமை (ஏப்ரல் 19) அறிவித்தது.
கேரளா முழுவதும் COVID -19 தொற்று பாதிப்புகள் தொடந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இரண்டு வார கால இரவு நேர ஊரடங்கு உத்தரவை மாநில அரசு திங்கள்கிழமை (ஏப்ரல் 19) அறிவித்தது.
கேரள தலைமைச் செயலாளர் தலைமையிலான கோவிட் -19 (COVID-19) நிர்வாக குழு இந்த முடிவை எடுத்தது.
"ஏப்ரல் 20 இரவு 9 மணி முதல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவில் அத்தியாவசிய தேவை அல்லாத நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை எந்தவொரு கூட்டங்களும் அனுமதி இல்லை. அத்தியாவசிய சேவைகள் (மருத்துவ கடைகள், மருத்துவமனைகள், எரிபொருள் நிலையங்கள், இரவு ஷிப்ட் ஊழியர்கள், பால், செய்தித்தாள், ஊடகம் போன்றவை), பொருட்கள் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றிற்கு இரவு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன ”என்று தலைமைச் செயலாளர் பிறப்பித்த அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மேலும், கல்வி மையங்கள் ஆன்லைன் ஊடகம் மூலமாக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கூடுதலாக, அனைத்து மால்கள், ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் ஆகியவைற்றை இரவு 7.30 மணியளவில் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து அரசு தேர்வுகளும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும என்றும் மாநில அரசு உத்தரவிட்டது. வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, திரிசூர் பூரம் திருவிழாவை நடத்தும் முடிவை மாநில அரசு ரத்து செய்து, கோவில் திருவிழாவை கோவிலுக்குள்ளேயே நடத்த முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் அடிப்படையில் திருவிழாவின் அமைப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பூரம் திருவிழாவுடன் தொடர்புடைய முக்கிய கோயில்களான திருவம்பாடி மற்றும் பரமேக்காவு கோயில் நிர்வாகங்கள், பூரம் திருவிழா வழக்கம் பொல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னர் கோரியிருந்தன. எனினும், தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் தடைக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி; வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR