தென்மேற்கு பருவமழை துவங்கியநிலையில் கன மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாவது நாளாக நாளையும் (ஜூன் 12-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டுள்ளார்.


கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்து உள்ளது. பலத்த காற்றுடன் பெய்யும் கன மழையால் மாவட்டத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும், மண் சரிவும் ஏற்பட்டும் வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்டம் முழுவதும் நேற்று விடுமுறை விடபட்டிருந்தது. 


இந்நிலையில், இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.