ஊரடங்கு பாதிப்பில் திருப்பதியும் தப்பவில்லை… பக்தர்கள் வராததால் காணிக்கை குறைந்தது
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், பக்தர்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக திருமலை திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், பக்தர்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிக்கப்பட்டதால், மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் கோவில் மூடப்பட்டிருந்தது.
ALSO READ | கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் Itolizumab ஊசி மருந்து பலனளிக்குமா…
பிறகு ஜுன் மாதம் 11ஆம் தேதி தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கோவிலுக்கு சுமார் இரண்டு லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இந்த அளவு சாதாரண நாட்களில் கோவிலுக்கு வரும் எண்ணிக்கையை ஒப்பிடும்போது மிக மிக குறைவு என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாதாரண நாட்களில், நான்கு நாட்களிலேயே இந்த அளவுக்கு பக்தர்களின் எண்ணிக்கை இருக்கும் எனவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று பரவலுக்கு முன்னதாக திருப்பதி கோவிலுக்கு தினசரி 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள். பிரம்மோற்சவ காலங்களில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வருகை தருவார்கள்.
இதனால் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மற்றும் பணத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளது
கடந்த மாதம் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணம் 15.8 கோடி ரூபாய் என்றும், சாதாரண நாட்களில் இந்த அளவு காணிக்கை ஐந்து நாட்களிலேயே கிடைக்கும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
சாதாரண நாட்களில் கோவிலுக்கு தினசரி இரண்டரை கோடி முதல் 4 கோடி ரூபாய் காணிக்கை கிடைக்கும். பிரம்மோற்சவ காலங்களில் 5 முதல் 6 கோ டி ரூபாய் காணிக்கையாக கிடைக்கும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
தொற்று நோய் பரவலை கருத்தில்கொண்டு பக்தர்களை அனுமதிப்பதில் மிகவும் எச்சரிக்கை நிலை கடைபிடிக்க படுவதாக ஆந்திரப் பிரதேசம் அமைச்சர் வெல்லம்பள்ளி சீனிவாசன் தெரிவித்தார்.
பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடுமையாக கடை படிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாஸ்க் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தனிநபர் விலகலை தொடர்ந்து கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கோவிலைச் சேர்ந்த தங்குமிடங்கள், உணவு அருந்தும் இடங்கள், பக்தர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள் ஆகியவை தொடர்ந்து சுத்திகரிக்க படுகின்றன.
இதுவரை எந்த ஒரு பக்தருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், பாதுகாவல் பணியிலிருந்த இருந்தவர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும் ஆந்திர பிரதேச அமைச்சர் கூறினார்.
பக்தர்களுக்கு பரவுவதைத் தடுக்க, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு, மாற்றப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் திரு. சுப்பா ரெட்டி தெரிவித்தார்.