நாடு முழுவதும் தினசரி COVID-19 தொற்று பாதிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவை தாண்டியுள்ள நிலையில், தொற்றுநோயின் மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்கும் என்ற அச்சம் நிலவுவதால், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை அதிக உஷார் நிலையில் செயல்பட்டு வருகின்றன. சமீபத்திய நாட்களில் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) நாடு முழுவதும் தொற்றுநோய் நிலைமையை மதிப்பாய்வு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்ட மெய்நிகர் கூட்டத்திற்கு பிரதமர் மோடி (PM Modi) இன்று மாலை 4:30 மணிக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் NITI ஆயோக், மத்திய சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் கோவிட்-19 பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.



மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (ஜனவரி 10) மாநில சுகாதார அமைச்சர்களுடன் கோவிட்-19 நிலைமை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து கலந்துரையாட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.


ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!


கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 1,59,632 புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மூன்றாவது அலை அச்சுறுத்தலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில், கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 5,90,611 ஆக உள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, நேர்மறை விகிதம், அதாவது தொற்று பரிசோதனை செய்தவர்களில், தொற்று உறுதியாகும் விகிதம் 10.21% ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் ஓமிக்ரான் வழக்குகளின் எண்ணிக்கையும் இன்று 3,623 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கோவிட்-19 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட 1,409 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.


ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR