PM Awas Yojana:பெரிய முடிவை எடுத்தது அரசு, மகிழ்ச்சியில் பயனாளிகள்

கிராமப்புறத்திற்கான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.95 கோடி பக்கா வீடுகளை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 09:07 PM IST
  • 1.65 கோடி பக்கா வீடுகள் நவம்பர் 2021-க்குள் கட்டப்பட்டுள்ளன.
  • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை 2024 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் லட்சக்கணக்கான கிராம மக்கள் பயனடைவார்கள்.
PM Awas Yojana:பெரிய முடிவை எடுத்தது அரசு, மகிழ்ச்சியில் பயனாளிகள் title=

PM Awas Yojana: பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டமான பி.எம் ஆவாஸ் யோஜனாவின் பயனாளிகளுக்கு நல்ல செய்தி. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீண் (PMAY-G Scheme) திட்டத்தை 2024 வரை தொடர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கிராமப்புறத்திற்கான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PM Awas Jojana) கீழ் 2.95 கோடி பக்கா வீடுகளை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 1.65 கோடி பக்கா வீடுகள் நவம்பர் 2021-க்குள் கட்டப்பட்டுள்ளன.

மீதமுள்ள குடும்பங்களும் தங்கள் பக்கா வீடுகளை கட்டிக்கொள்ள வழிவகுக்கும் வகையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை 2024 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான கிராம மக்கள் பயனடைவார்கள்.

இதுவரை 1.97 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது

அரசாங்கம் வழங்கிய தகவலின்படி, மார்ச் 2021 வரை, PM Awas Yojana – Rural திட்டத்திற்கு 1.97 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.1,44,162 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. மீதமுள்ள பக்கா வீடுகள் கட்ட, 2,17,257 கோடி ரூபாய்க்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2024-க்குள், மற்ற குடும்பங்களுக்கு, பக்கா வீடுகள் வழங்கப்படும்.

ALSO READ | PM Kisan Yojana: உங்களுக்கு ரூ.2000 இன்னும் வரவில்லையா? அப்ப இத பண்ணுங்க

அரசாங்கம் வழங்கிய தகவல்

இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் (Central Government) மொத்தச் செலவு ரூ.1,43,782 கோடியாகும். இதில் ரூ.18,676 கோடி நபார்டு வங்கிக்கான கடன் வட்டியும் அடங்கும். இத்திட்டத்துடன் மலைபிரதேச மாநிலங்களுக்கு 90 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என்ற அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை மத்திய மற்றும் மாநிலங்களுக்கு 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும். அதே சமயம் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் பணம் செலவிடப்படுகிறது.

கழிப்பறைகள் கட்டுவதற்கும் தொகை கிடைக்கும்

கிராமப்புறங்களுக்கான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்ட ரூ.12,000 வழங்கப்படுகிறது. இது கட்டிடம் கட்டும் தொகைக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பக்கா வீடு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை ஆகியன வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ | PM Kisan: ‘இதை’ செய்யாத விவசாயிகளுக்கு 10வது தவணை கிடைப்பதில் தாமதம் ஆகும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News