போபால்: மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியில் வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு பழங்குடி பெண்ணின் சோகமான கதை அறிந்த பின்பு, இந்திய அரசு அமைப்பின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசாங்க திட்டங்களின் நன்மை யாருக்கு முக்கியமாக தேவை உள்ளதோ, அவர்களை அடையவில்லையா? வெறும் காகிதம் அறிவிப்புக்களாக மட்டும் வெளியிடப்படுகிறதா? அல்லது அந்த திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைய வில்லைய? என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், சாகர் நகரத்தில் தனியாக தவித்து கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். அந்த மாணவி பள்ளி கட்டணம் கட்ட பணம் இல்லாததால் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். அந்த மாணவியிடம் போலீசார் விசாரித்த போது, அழுதுக்கொண்டே பேசிய அவர், பள்ளியில் கட்டணம் செலுத்தாததால், தினமும் பள்ளியில் அவதூறுகளையும், திட்டுவதையும் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில், வீட்டில் கட்டணம் செலுத்த பணம் கேட்டதற்காக அவர்களும் என்னை திட்டினார்கள். இரண்டு பக்கமும் என்னை அவதூறாக பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் எனக் கோரியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழங்குடி குடும்பத்திலிருந்து படிக்க வந்த மாணவி 12 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். கர்ராபூர் ஊரில் ஹையர் செகண்டரியில் படிப்பவர். ஏழை வீட்டில் இருந்து படிக்க வந்துள்ளார் மாணவி. மாணவிக்கு பள்ளி உடை மற்றும் காலணிகள் இல்லை. 


மன உளைச்சலுக்கு ஆளானதால், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கர்ராபூரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள லித்தாரா ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்துக் கொண்டதாக அந்த மாணவி கூறினார். 


அந்த இடத்தில் தனியாக இருக்கும் மாணவியை பார்த்த போலீசார், அவளுடன் பேசி உள்ளனர். அதன் பிறகு தான் போலீசாருக்கு உண்மை தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்த தகவலை சனோதா காவல் நிலையத்திற்கு போலீசார் தெரிவித்தனர். அதன் பிறகு மாணவியை, தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்க கொண்டு செல்லப்படடார்.


தற்போது, மாணவியை சமாதானப்படுத்திய பின்னர், காவல்துறையினர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவரை விட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்திலிருந்து பல கேள்விகளும் எழுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறுமி ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கும்போது, பழங்குடி பெண் மாணவர்களுக்காக நடத்தப்படும் திட்டங்களின் பலனை ஏன் அவளை அடைய வில்லை. பள்ளி கட்டணம் மற்றும் உடைக்காக ஏன் பலமுறை பள்ளி நிர்வாகம் அவளை துன்புறுத்துகிறது.