ஒமிக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்திவைப்பு
ஒமிக்ரான் அச்சம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) அரசு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் அச்சம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) அரசு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI புதன்கிழமை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஜனவரி 6 ஆம் தேதி அரபு நாட்டிற்கு பயணம் செய்ய செய்ய திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
அதிகரித்து வரும் ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள பயணம், பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் 50 ஆண்டுகால இராஜதந்திர உறவை கொண்டாடும் நோக்கில், பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணம் திட்டமிடப்பட்டது.
அதிகரித்து வரும் ஒமிக்ரான் காரணமாக இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகவும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இரண்டாம் அலையில் டெல்டா தொற்று பரவல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதால், ஒமிக்ரான் பரவலை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்கு முழு வீச்சில் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நவம்பரில் கடந்த வாரத்தில் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டதில் இருந்து இந்தியாவில் 700க்கும் அதிகமான ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்
மறுபுறம், ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திங்களன்று 1,732 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், அபுதாபியில் கோவிட்-19 வேகமாக பரவியதைத் தொடர்ந்து நாட்டிற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடப்படாதவர்கள் டிசம்பர் 30 முதல் எமிரேட்டுக்குள் நுழைய PCR சோதனை நெகடிவ் ரிபோர்ட் தேவைப்படும். இதுவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா வைரஸ் நோயால் 755,000 தொற்று பாதிப்புகள் மற்றும் 2,160 இறப்புகள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10,186 ஆக உள்ளது.
ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR