Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி
Durga Pooja Accident: தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது மால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 7 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில், துர்கா சிலை கரைக்கும் போது பெரும் விபத்து நடந்துள்ளது. நீரில் சிலைகளை கரைக்குக்ம் போது, மால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட மக்கள் அலறி கூச்சலிட்டனர். தண்ணீரில் தத்தளித்த மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றுமாறு அலறினாலும் பலர் உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கியதுடன், சிலை கரைக்க வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தசரா விழாவில் சிலை கரைப்பு சடங்கின்போது ஏற்பட்ட திடீர்வெள்ளமும், அதில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜல்பைகுரியின் மால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
தசரா விழாவில் சுமார் 9 நாட்கள் துர்கா தேவியை வழிபட்ட பின்னர், பத்தாம் நாளாள நேற்று (அக்டோபர் 5, புதன்கிழமை) விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. பத்தாம் நாளான்று, துர்கா சிலைகளை ஆற்றி கரைக்கும் வங்காள மக்களின் சம்பிரதாயப்படி, ஜல்பைகுரியில் மால் ஆற்றுக்கு சிலைகளை எடுத்துச் செல்லப்பட்டன
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
மால் ஆறு, பூடானில் இருந்து இந்தியாவிற்குள் பாய்கிறது. மாநிலம் முழுவதும் காலையில் இருந்தே துர்கா விசர்ஜன் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கின. மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தசராவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். மாலையில் மால் ஆற்றுக்கு வந்து, உற்சாகத்துடன் அன்னை துர்கா தேவியை வழியனுப்பும் பாடல்களை பாடிக் கொண்டு சிலைகளை கரைத்துக் கொண்டிருந்தனர். அங்கு கூடியிருந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலைகளைக் கரைக்க மக்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றனர். துர்கா அன்னைக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக, ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆற்றின் நடுவில் நின்றிருந்தனர். திடீரென ஆற்றில் நீர்வரத்தும் வேகமும் அதிகரித்தது.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
நடப்பது என்ன என்பதை புரிந்துகொள்வதற்குள், தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்து, நின்றுக் கொண்டிருந்தவர்களை அடித்துச் செல்லத் தொடங்கியது. தண்ணீரின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால் கரையில் நின்றவர்கள் கூட, அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
ஆற்றின் உக்கிர வடிவம், துர்கா தேவியின் சீற்றத்தைப் போல இருந்தது. தண்ணீரில் ஓடும் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றக் கூச்சலிட்டனர், ஆனால் ஆற்றின் சீற்றம், மக்களை உள்ளே வர முடியாமல் தடுத்தது.
கண் இமைக்கும் நேரத்தில், ஆற்றிற்குள் நின்றிருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டபோது, அவர்கள் எழுப்பிய ஓலக்குரலும் நீருக்கும் அடங்கியது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியை துவக்கியது. விபத்தில், சிலர் காப்பாற்றப்பட்டனர், ஆனால் பலரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ