குறைந்த வெளிச்சம் மற்றும் காற்று மாசு காரணமாக சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் இன்று மாலை மேல் தான் இயல்பு நிலை திறும்ப வாயப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசமான வானிலை காரணமாக சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம், விமான புறப்படுதல் போன்றவை நிகழவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மணிக்கு 40 கி.மீ வேகத்தில் வீசிய புயல், ராஜஸ்தான் மாநிலத்தில் பலத்த அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள பெரும்பாலான பகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதன் தாக்கம் இன்னும் குறையவில்லை.


இதுகுறித்து சண்டிகரின் வானிலை மைய இயக்குனர் சுரிந்தர் பால் கூறுகையில், இந்த புயலானது வடமேற்கு பிராந்தியத்தில் மேற்குத் திணறல் காற்றை துடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த புயலின் தாக்கம் இன்று மாலை வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேலை நாளையும் நீடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலைமைகள் நிலவி வருகின்றது. மாசு நிறைந்த வானிலை வெப்பநிலையினை கொண்டுள்ளது. இரவு 10 மணிவரையில் வெளியில் தாக்கம் இருப்பதினை பொதுமக்களால் உணர முடிகிறது!