கர்நாடகா வெடி விபத்தில் 8 பேர் பலி: முதல்வர் பிரதமர் இரங்கல்
கல் குவாரிக்கு டைனமைட்டுகளை ஏற்றிச் சென்ற லாரியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என தெரிய வந்தது. குண்டுவெடிப்பில் முழு லாரியும் வெடித்துச் சிதறியது.
சிவமோகா: கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் ஹுனாசோடு கிராமத்தில் ரயில்வே கிரஷர் தளத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட டைனமைட் குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கே.பி.சிவகுமார் தெரிவித்துள்ளார். இரவு சுமார் 10.30 மணியளவில், சிவமோகாவில் சட்டவிரோதமாக இயங்கிக்கொண்டிருந்த கல் குவாரியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. சிவமோகாவில் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான சிக்கமகளூரு மற்றும் தாவணகரே ஆகிய இடங்களிலிலும் நிலம் அதிர்ந்தது.
"ஹுனசோடு கிராமத்தில் ஏற்பட்ட டைனமைட் குண்டுவெடிப்பில் (Bomb blast) குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்" என்று சிவமோகா மாவட்ட ஆட்சியர் கே.பி.சிவக்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார். "நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட பலத்த குண்டுவெடிப்பு சிவமோகா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது," என்று அவர் கூறினார்.
வெடிப்பின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது. பூகம்பம் ஏற்பட்டிருப்பதாக நினைத்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கல் குவாரியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது என நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறினார். பல வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன, பல இடங்களில் ஜன்னல்கள் சிதைந்தன.
கல் குவாரிக்கு டைனமைட்டுகளை ஏற்றிச் சென்ற லாரியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என பின்னர் தெரிய வந்தது. குண்டுவெடிப்பில் முழு லாரியும் வெடித்துச் சிதறியது. லாரியில் இருந்தவர்கள் உயிர் இழந்தனர்.
"இந்த சம்பவம் ஒரு கல் குவாரியில் நடந்தது. இங்கு பொதுவாக குறைந்தபட்சாம் வெடி பொருட்களுக்கான 50 பெட்டிகளை சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது” என்று காவல்துறை கூறியதாக செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் தெரிவித்தது.
ALSO READ: சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். சிவமோகா-ஹனகல் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அபாலகேர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை சவலுங்கா மற்றும் ஷிகரிபுரா வழியாக செல்கிறது. பெங்களூருவில் இருந்து கிட்டத்தட்ட 290 கி.மீ தொலைவில் உள்ள ஷிகாரிபுரா, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் (BS Yediyurappa) சொந்தத் தொகுதியாகும்.
செய்தி பரவிய சிறிது நேரத்திலேயே, ஷிவமோகா எஸ்.பி. மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை அறிந்து கொள்ள அந்த இடத்தை அடைந்தனர். முதலில் குண்டுவெடிப்பில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக அந்த இடத்திலிருந்து வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஏஜென்சிகள் பின்னர் வெடிப்பினால் எட்டு பேர் இறந்ததாக தெரிவித்தன.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, இப்பகுதியில் மேலும் குண்டுவெடிப்பு ஏற்படாமல் தடுக்க சிறப்பு பாம் ஸ்க்வாடும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.
"சிவமோகாவில் ஏற்பட்ட உயிர் இழப்பால் வேதனை. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று பிரதமர் அலிவலகம் (PMO) கூறியது.
ALSO READ: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR