புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இல்லமான 7 லோக் கல்யாண் மார்கில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இ-சிகரெட் (Electronic cigarette) தொடர்பாக ஒரு பெரிய முடிவை எடுக்க உள்ளது. இது மட்டுமில்லாமல் பிளாஸ்டிக் தடை உட்பட பல முக்கியமான முடிவுகளை இந்த கூட்டத்தில் எடுக்க உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்க உள்ளது. மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விநியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்களை குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வைத்துக் குறித்தும் முடிவெடுக்கப்படலாம். அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு முன்னர் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நாட்டில் அதிகரித்து வரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த கொண்டு வந்தது தான் இ-சிகரெட் முறை என பலராலும் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையா? இ-சிகரெட் மூலம் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த முடியுமா? கட்டுப்படுத்த முடியும் என்றால் பின்னர் ஏன் அரசாங்கம் தடை செய்ய விரும்புகிறது. நமது அரசாங்கம் மட்டுமில்லை, உலகின் பல நாடுகள் இ-சிகரெட் முறையை தடை செய்ய விருபுகிறது. இ-சிகரெட் குறித்து பலர் பல விதமான கருத்துகளை கூறி வருகின்றனர். இன்று நடைபெற உள்ள மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் இ-சிகரெட் தொடர்பாக என்ன முடிவு எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம்.