தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு; பீதியில் மக்கள்!
50 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது!
தலைநகர் டெல்லியில், இன்று காலை 7:50 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது!
ரிக்டர் அளவில் 4-ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
இன்று காலை ஆசிய நாடான தஜிகிஸ்தானில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6-ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் பாதிப்பால் தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், அங்குள்ள கட்டடிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் முக்கிய நகரங்களில், இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய தலைநகர் டெல்லி, உத்தர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும், லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
இதன் காரணமாக பீதியடைந்த பொதுமக்களில் சிலர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனினும், சற்று நேரத்தில் பீதி அடங்கியது.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தாலேயே, டெல்லி, உ.பி.,யில் நில அதிர்வு உணரப்பட்டதாக, அமெரிக்காவை சேர்ந்த புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.