ஜம்மு-காஷ்மீர்: தாங்க் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்க் என்ற பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கும் ஏற்ப்பட்டது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்குமானது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக நேற்று இரவு சுமார் 8:51 மணிக்கு டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர். நிலஅதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவந்தார்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் ஆலுவலகத்தை விட்டு வெளியே சாலைபகுதிக்கு வந்தனர். உத்தராகாண்டில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கிமீ தொலைவில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.