மணிப்பூர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5-ஆக பதிவு!
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலின் கிழக்குப் பகுதியில் 5.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலின் கிழக்குப் பகுதியில் 5.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
பிற்பகல் 12.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, இம்பாலில் இருந்து சுமார் 22.8 கிமீ (14 மைல்) ஆழம் மற்றும் 101 கிமீ (63 மைல்கள்) கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் சிறிதளவு நடுக்கம் ஏற்பட்டதால் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.