மணிப்பூரில் 4-ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4-ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தில் பாதிப்புகள் ஏதும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர் எனவும் தகவல் வந்துள்ளது.