ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9-ஆக பதிவு!
மேற்கு ஜப்பானின் ஒசாகா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9-ஆக பதிவு!
மேற்கு ஜப்பானின் ஒசாகோ, கியாடோவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை சரியாக 6:12 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.9- ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.