தமிழகத்தில் தேர்தல் செலவிற்காக 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு?
எதிர்வரும் லோக்சபா தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் இருந்து ரூ.414 கோடி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
எதிர்வரும் லோக்சபா தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் இருந்து ரூ.414 கோடி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அரசு செயலர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், அடிப்படை வசதிகளை செய்து தர, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில், தேர்தல் செலவிற்காக 414 கோடி ரூபாய் ஒதுக்கும்படி நிதித்துறை செயலரிடம் கோரிக்கை வைத்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில், காவல்துறையினருடன் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஈடுபடுத்தப்படவும் திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 200 கம்பெனி, துணை ராணுவ வீரர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டர்கள், எஸ்.பி., ஆகியோர் கலந்தாலோசித்து, பதட்டமான ஓட்டுச் சாவடிகள் விபரங்களை அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிக்கையில்., ஓட்டு சாவடி எண்ணிக்கை, தேர்தல் அறிவிப்புக்கு பின் மாறக்கூடும். தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டவர்கள், கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும். வர மறுத்தால், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள் குறைவாக உள்ள பகுதிகளில், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போன்றோரை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த, தேர்தல் கமிஷன் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.