செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் ஏசாட் சோதனை குறித்த அறிவிப்பை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிமீறல் அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டு மக்களுக்கு மிக முக்கிய உரையாற்றப் போவதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 300 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விண்வெளியில் உள்ள செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியது என அறிவித்து உரையாற்றினார்.


மோடியின் உரைக்கு முன்னதாக, பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் " 27 ஆம் 11.45 முதல் 12  மணிக்குள் முக்கியத் தகவலுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் பாருங்கள்" என்று தனது ட்விட்டரில் பதிவு செய்தார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. மிஷன் சக்தி என்று இந்த ஆப்ரேஷனுக்கு பெயரிடப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.


அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு சோதனை முயற்சியாகும்.


வெறும் 3 நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோள்களைக் காக்கும் முயற்சியே தவிர மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல் இல்லை, மிஷன் சக்தி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.


இதை தொடர்ந்து, விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளின் சாதனையை தமது சாதனை போல காட்டுவதற்கு பிரதமர் மோடி அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டதாகவும், இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்றும் எதிர்க்கட்சிகள் புகார் கூறின.


இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பிரதமரின் உரை தேர்தல் நடத்தை விதி மீறல் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுங்கட்சிக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பிரதமரின் உரை விதி மீறல் அல்ல என, அதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.