ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. 27 பேருக்கு நோட்டீஸ்
ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி புதிய மனு ஒன்று, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
27 ஆம் ஆத்மி எம்எல்ஏ- க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக அவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் ஜனாதி பதி மாளிகை மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த எம்எல்ஏ-க்கள் பட்டியலில் டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, முன்னாள் சபாநாயகர் பந்தனா குமாரி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எம்எல்ஏ-க்கள் மீதான புகார் மனுக்கள் குறித்து வரும் நவம்பர் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்