'ABCD' சூத்திரத்தின் படி அதிக ஓட்டு விழும் தொகுதிக்கு முன்னுறிமை அளிக்கப்படும் என கூறிய மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் நடைப்பெற்று வரும் நிலையில், சமீபத்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக-விற்கு அதிக ஓட்டு அளிக்கும் தொகுதி மக்களுக்கு முன்னுறுமை அளித்து அரசு சலுகை அளிக்கும் என தெரிவித்தார். மேனகா காந்தியின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இதுபோன்ற கருத்துக்களை இனி பரப்ப கூடாது என எச்சரித்துள்ளது.


கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சுல்தான் பூரின் சாரக்கோட் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மேனகா காந்தி பிரச்சார கூட்டத்தில் தெரிவிக்கையில்., "நாங்கள் இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றோம். ஆனால் இத்தொகுதியில் என்ன மாற்றங்களை கொண்டு வந்தோம் என தெளிவாக புரிவதில்லை. எனவே வரும் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு வித்தியாத்தின் பேரில் அத்தொகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதாவது., எந்தொரு தொகுதிகள் பாஜக-விற்கு 80% வாக்குகள் பதிவாகிறதோ அது A வரிசை தொகுதி எனவும், 60% வாக்கு பதிவாகும் தொகுதி B வரிசையிலும், 50% வாக்குபதிவு தரும் தொகுதி C மற்றும் 50% குறைவாக இருக்கும் தொகுதி D வரிசையிலும் பட்டியலிடப்படும்.


பின்னர் இந்த ABCD வரிசையின் அடிப்படையில் கிராம வளர்ச்சிகான நிதி வழங்கப்படும். குறிப்பாக A வரிசை தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவித்தார்.


மேனகா காந்தியின் இந்த சர்ச்சைகுறிய கருத்தை அடுத்து அவர் மீது விமர்சனங்களை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


வரும் மக்களவை தேர்தலில் மேனகா காந்தி ஆளும் பாஜக சார்பில் சுல்தான் பூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி இத்தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் வருண் காந்தி தனது தாய் மேனகா-வின் வெற்றி தொகுதியான பிலிப்பிட்டில் போட்டியிடுகின்றார்.