மகாராஷ்டிரா ஆர்பாட்டம் எதிரொலியாக, மும்பையில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ளவிருந்த மாநாடுக்கு அனுமதி மறுக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீமா கொரிகியான் வன்முறையை கண்டித்து நேற்று மகாராஷ்டிராவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. இந்த கடையடைப்ப போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் நகரமே தீயில் மூழ்கியது!


இந்த கலவரத்தில் கிட்டதட்ட 42 பேருந்துக்கள் தீக்கு இரையாகின, வேளான்மை பொருட்கள் வினியோகம் பொருத்தவரையில் வழக்கத்தைவிட 20% காய்கரிகள் வினியோகம் தடைப்பட்டதாக வேளான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சராசரியாக ஐம்பது மாணவர்கள் மட்டுமே வந்திருந்த நிலைபாடு ஏற்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த முழு அடைப்பை தொடர்ந்து, பணிக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 


இதனையடுத்து போராட்டம் முடிவடைந்த நிலையில் இன்று பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பினர். அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது படிபடியாக திரும்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது!


இந்த நிலையில், மும்பையில் மாணவர்கள் தொடர்பான மாநாடு ஒன்று இன்று நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அண்மையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.


ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். மேலும் நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கத்தில் கூடியிருந்த மாணவர்களையும் காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர்!


இதற்கிடையில் விஷேம்புபூக் காவல்நிலையத்தில் ஐபிசி பிரிவின் 153 (A), 505 மற்றும் 117 ஆகிய பிரிவுகளின் கீழ் மெவினி மற்றும் காலித் ஆகியோருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என ANI செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது!